/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
2300 கனவு இல்ல திட்ட வீடுகளுக்கு அனுமதி
/
2300 கனவு இல்ல திட்ட வீடுகளுக்கு அனுமதி
ADDED : மே 29, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் 2300 கனவு இல்ல திட்ட வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் கருணாநிதி கனவு இல்ல திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு இத்திட்டத்தில் மண்சுவர் கொண்ட தகர, கூரை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற அரசு ரூ.3.50லட்சம் வழங்குகிறது. இதனை நான்கு தவணைகளாக வழங்குகிறது.
இந்த நிதியாண்டில் வட்டாரம் வாரியாக தேனியில் 193, பெரியகுளம் 355, போடி 375, மயிலாடும்பாறை கடமலைகுண்டு 468, சின்னமனுார் 205, உத்தமபாளையம் 60, ஆண்டிபட்டி 578, கம்பம் 66 என மொத்தம் 2300 வீடுகள் அமைக்கப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

