/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அங்கீகாரம் இல்லாத மனை கட்டுமானங்களுக்கு அங்கீகாரம் ஊரக நகரமைப்புத்துறை உதவி இயக்குனர் தகவல்

ADDED : பிப் 17, 2024 05:51 AM
தேனி: மாவட்டத்தில் 2016 அக். 20க்கு முன் வாங்கப்பட்ட அங்கீகாரம் இல்லாத மனை, கட்டுமானங்களின் உரிமையாளர்கள் அனைவரும் அங்கீகாரம் செய்து கொள்ளலாம்.
இதற்கான இறுதி தேதி 2024 பிப்., 29 என்பதால் இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.' என, மாவட்ட ஊரக நகரமைப்புத்துறையின் உதவி இயக்குனர் காவியம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: இத்திட்டத்தின் கீழ் குறைந்த பரப்பளவு உள்ள மனைகளையும் அங்கீகாரம் செய்து கொள்ளலாம். அனுமதிக்கு மாறான கட்டுமானங்கள் முறைப்படுத்திக் கொள்ளும் இந்தவாய்ப்பினை தவறவிட்டால் எதிர்காலத்தில் எந்த எந்த மனை, கட்டுமானத்தையும் பத்திரப் பதிவு மூலம்விற்கவோ, வாங்கவோ வாரிசுகளுக்கு தானசெட்டில்மென்ட் செய்ய இயலாத நிலை ஏற்படும்.
இந்த நல் வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்தி, பிப்., 29க்குள் அங்கீகாரம் பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர்தெரிவித்தார்.