/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திறனறித்தேர்வு: 3 ஆயிரம் பேர் எழுத ஏற்பாடு
/
திறனறித்தேர்வு: 3 ஆயிரம் பேர் எழுத ஏற்பாடு
ADDED : ஜன 05, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மத்திய அரசு சார்பில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி திறனறித்தேர்வு பிப்.,4ல் நடக்கிறது. இத்தேர்விற்கு அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.
இத்தேர்வு எழுத 3ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.12ஆயிரம் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் 15 மையங்களில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்களை தேர்வு செய்யும் பணியில் கல்வித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்தாண்டு நடந்த தேர்வில் 78 மாணவர்கள் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.