/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதுபாரில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தகராறு
/
மதுபாரில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் தகராறு
ADDED : செப் 26, 2024 05:40 AM
தேவதானப்பட்டி: டாஸ்மாக் பாரில் தின்பண்டங்களை சாப்பிட்டு பணம் தராமல் கடைகளை அடித்து சேதப்படுத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, எம். வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் அன்னக்கொடி 26. கெங்குவார்பட்டி புஷ்பராணி நகர் டாஸ்மாக் கடையில் மது பார் நடத்தி வந்தார். கட்டக்காமன்பட்டியைச் சேர்ந்த 10 பேர் ஆட்டோ, டூவீலரில் வந்தனர். பாரில் மது குடித்து கொண்டு தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டனர். பணம் கேட்டதற்கு தர மறுத்து மது பாட்டிலால் அன்னக்கொடி தலையில் அடித்து காயப்படுத்தினர்.
இதில் பார் ஊழியர் மாயிக்கும் அடி விழுந்தது. ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானது. காயமடைந்த அன்னக்கொடி, மாயி பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆட்டோவில் வந்தவர்கள் தப்பி செல்லும்போது சிறிது தூரத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. தேவதானப்பட்டி போலீசார் ஆட்டோவை கைப்பற்றி தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.-

