/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
/
நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
ADDED : டிச 26, 2024 05:23 AM
தேனி: மாவட்டத்தில் இயங்கிவரும் 26 நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி லட்சுமிபுரத்தில் இயங்கிவரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 13 நீதிமன்றங்கள் உள்ளன. பெரியகுளத்தில் ஒருங்கிணைந்த 4 நீதிமன்றங்கள், உத்தமபாளையத்தில் ஒருங்கிணைந்த 4 நீதிமன்றங்கள், போடியில் 3, ஆண்டிபட்டியில் 2 நீதிமன்றங்கள் என மாவட்டத்தில் 26 நீதிமன்றங்கள் இயங்குகின்றன.
இந்நீதிமன்றங்களில் டி.ஜி.பி., உத்தரவில் லட்சுமிபுரம் மாவட்ட நீதிமன்றங்களுக்கு ஒரு எஸ்.ஐ., அல்லது சிறப்பு எஸ்.ஐ., மேற்பார்வையில், 8 போலீஸ்காரர்கள் உட்பட 9 பேர்.
இதர நீதிமன்றங்களுக்கு தலா எஸ்.ஐ., 2 போலீஸ்காரர்கள் உட்பட தலா மூவர் துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்டிருந்தார். இதனால் நீதிமன்றங்களில் போலீசார் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்தி பணிபுரிந்து வருகின்றனர்.