ADDED : மார் 19, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி எஸ்.ஐ., முருகேசன் ரோந்து பணிக்கு சென்ற போது புல்லக்காபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பதிவு எண் இல்லாத டூவீலரில் வந்த இருவர், எஸ்.ஐ., பார்த்தவுடன் டூவீலர் நிறுத்திவிட்டு ஓடினர்.
டூவீலரில் சோதனையிட்டதில் அதில் இரு அரிவாள்கள், கட்டிங் பிளேடு இருந்தது.
தேவதானப்பட்டி போலீசார் அடையாளம் தெரிந்த, பெயர் விலாசம் தெரியாத இரு நபர்களை தேடி வருகின்றனர்.--

