/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டூ வீலர் மீது பஸ் மோதி ராணுவ வீரர் பலி
/
டூ வீலர் மீது பஸ் மோதி ராணுவ வீரர் பலி
ADDED : அக் 28, 2025 04:15 AM

உத்தமபாளையம்: அக். 28-: கம்பத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி நேற்று காலை 11:30 மணிக்கு அரசு போக்குவரத்து கழக பஸ் சென்றது. பஸ்சை டிரைவர் சந்திரசேகர் ஓட்டினார்.
உத்தமபாளையம் பழைய பைபாஸ் ரோட்டில், பஸ்ஸ்டாண்ட் திரும்பிய போது, பஸ் வளைவில் திரும்பாமல், நேராக சென்று எதிரில் டூவீலரில் வந்தவர் மீது மோதியது.
அதில் டூவீலர் நொறுங்கியது. பின் அங்கு நின்றிருந்த டிரைவிங் ஸ்கூல் ஜீப்பையும் இடித்து அங்கிருந்த 3 மாடி கட்டடத்தின் பில்லரை சேதப்படுத்தி பஸ் நின்றது.
டூவீலர் மீது பஸ் மோதியதில் இறந்தவர் அனுமந்தன்பட்டியை சேர்ந்த மணி மகன் சுஜித் 28 என்பதும், இவர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக் கின்றனர்.
விபத்து நடந்த அதே இடத்தில் ஓராண்டிற்கு முன் லாரி மோதி ரோட்டு கடையில் டிபன் சாப்பிட்டு கொண்டிருந்த ஒருவர் பலியானது குறிப்பிடத் தக்கது.

