/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராணுவ வீரர் மனைவியிடம் ரூ.6 லட்சம் மோசடி
/
ராணுவ வீரர் மனைவியிடம் ரூ.6 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 12, 2025 04:46 AM
தேனி பெரியகுளம் தென்கரை வைகை அணை சாலையை சேர்ந்த ராணுவ வீரர் கருணாகரன்.
இவரது மனைவி காவேரி 35. இத்தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். காவேரிக்கு தென்கரை மார்க்கெட் தெருவை சேர்ந்த ஜெயராமன் மனைவி பாண்டியம்மாளுடன் பணம் கொடுக்கல் வாங்கலில் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் பாண்டியம்மாள் சுயஉதவிக்குழு நடத்துவதாக தெரிவித்து, மகளிர் சுயவுதவிக்குழுவினருக்கு வங்கிக்கடன் பெற்றுத் தருவதாகவும், அதில் வங்கியின் பணம் வந்தவுடன் தருகிறேன் எனக்கூறி, ரூ.6 லட்சம் கடனாக பெற்றார். பின் அந்த பணத்தை தராமல் ஏமாற்றினார். இதனால் காவேரி தேனி எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார், ஜெயராமன், பாண்டியம்மாள் மீது வழக்குபதிந்த விசாரிக்கின்றனர்.

