/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏ.ஐ., கேமராக்கள் மூலம் அபாராதம் விதிக்க ஏற்பாடு
/
ஏ.ஐ., கேமராக்கள் மூலம் அபாராதம் விதிக்க ஏற்பாடு
ADDED : அக் 06, 2025 05:50 AM
தேனி : தேனி நகர் பகுதியில் ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தி, போக்குவரத்து விதிமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.
போக்குவரத்து போலீசார் சிலர் கூறுகையில், ''ஹெல்மெட் அணியாமல் பயணித்தல், டூவீலரில் மூவர் பயணித்தல், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்துதல் உள்ளிட்ட விதி மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகிறோம். அப்போது சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபடுவது, அரசியல் கட்சியினரை தெரியும் எனக் கூறி தகராறில் ஈடுபடுவது தொடர்கிறது. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், கேரள மாநிலத்தில் உள்ளது போல் ஏ.ஐ., கேமராக்கள் மூலம் விதிமீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டு உள்ளோம். அதற்கான கேமராக்கள் விரைவில் நகர் பகுதியில் பொருத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக நேருசிலை சிக்னல் பகுதியில் பொருத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றனர்.