/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
6233 பேர் போலீஸ் தேர்வு எழுத ஏற்பாடு நவ.,9ல் நடக்கிறது
/
6233 பேர் போலீஸ் தேர்வு எழுத ஏற்பாடு நவ.,9ல் நடக்கிறது
6233 பேர் போலீஸ் தேர்வு எழுத ஏற்பாடு நவ.,9ல் நடக்கிறது
6233 பேர் போலீஸ் தேர்வு எழுத ஏற்பாடு நவ.,9ல் நடக்கிறது
ADDED : நவ 06, 2025 06:52 AM
தேனி: மாவட்டத்தில் நவ.9ல் 6 மையங்களில் நடக்கும் போலீஸ் தேர்வை 986 பெண்கள் உட்பட 6233 பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காலியாக உள்ள 3665 இரண்டாம் நிலை போலீசார், சிறைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் பணிக்கான தேர்வு ஆக.,ல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு நவ.9ல் தமிழகம் முழுவதும் நடக்கிறது. தேனியில் நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கம்மவார் கலை அறிவியல் கல்லுாரி, மேரிமாதா மேல்நிலைப் பள்ளியில் ஆண் தேர்வர்களும், நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் பெண் தேர்வகளும் தேர்வு எழுதுகின்றனர்.
பெண்கள் 986 பேர், ஆண்கள் 5247 பேர் என மொத்தம் 6233 பேர் தேர்வினை எழுதுகின்றனர். எஸ்.பி., சினேஹாபிரியா தலைமையில் போலீசார், அமைச்சுப் பணியாளர்கள் என 350 பேர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.