sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

ஆகாயத்தாமரையால் சுருங்கிய தாமரைக்குளம் உத்தமபாளையம் பகுதி; இறவை பாசன விவசாயிகள் பாதிப்பு

/

ஆகாயத்தாமரையால் சுருங்கிய தாமரைக்குளம் உத்தமபாளையம் பகுதி; இறவை பாசன விவசாயிகள் பாதிப்பு

ஆகாயத்தாமரையால் சுருங்கிய தாமரைக்குளம் உத்தமபாளையம் பகுதி; இறவை பாசன விவசாயிகள் பாதிப்பு

ஆகாயத்தாமரையால் சுருங்கிய தாமரைக்குளம் உத்தமபாளையம் பகுதி; இறவை பாசன விவசாயிகள் பாதிப்பு


ADDED : நவ 06, 2025 07:00 AM

Google News

ADDED : நவ 06, 2025 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் ராமசாமி நாயக்கன் பட்டியையும், கோகிலாபுரத்தையும் இணைக்கிறது தாமரைக்குளம் கண்மாய், இந்த ஊரில் பாசனத்திற்கான பெரிய கண்மாயாகும். 65 ஏக்கரிலான இக் கண்மாய் நிலை மிக மோசமாக உள்ளது. உத்தமபாளையம் பகுதியில் நெல், திராட்சை, வாழை அதிகம் சாகுபடியாகிறது. நெல் சாகுபடி முழுக்க முழுக்க ஆற்று பாசனத்தில் நடைபெறுகிறது.

காய்கறி, வாழை, திராட்சை முழுவதும் இறவை பாசனத்தில் நடைபெறுகிறது. கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராமசாமி நாயக்கன்பட்டி, ஒத்தப்பட்டி, பரமத்தேவன்பட்டி போன்ற கிராமங்களில் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்க இந்த கண்மாய் பயன்படுகிறது. மேலும் பாளையம் பரவு பகுதியில் 500 ஏக்கர் வரை நெல் சாகுபடிக்கு பயன்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலக வங்கி நிதி உதவியுடன் கண்மாய் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. ஆனால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த பல ஆண்டுகளாக இக் கண்மாய் பற்றி நீர்வளத்துறை கண்டு கொள்வது இல்லை. கண்மாய் தூர் வாராததால் கண்மாயின் 50 சதவீத பகுதியில் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.

எஞ்சிய பகுதியில் ஆகாயத்தாமரை வளர்ந்து பாசனத்திற்கான நீரை தேக்க முடியாத நிலை உள்ளது. கண்மாயை ஆக்கிரமிப்புகள் ஒரு புறம் தென்னந் தோப்புகளாகவும், மறுபுறம் நெல் வயல்களாக மாறியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்மாயை மூடிய ஆகாய தாமரை அன்பழகன், உத்தமபாளையம்: தாமரைக்குளம் கண்மாய் பராமரிப்பு பணி முறையாக மேற்கொள்ளப்படவில்லை. கருவேல மரங்கள் வளர்ந்தும், ஆகாய தாமரை படர்ந்தும் கண்மாயை மூடி வருகிறது. கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி பராமரிக்க வேண்டும். சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கான தோட்ட கிணறுகளுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயரவும், கோடையில் கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பயன்பட்டு வந்த கண்மாய் தற்போது முறையாக பராமரிப்பு இன்றி உள்ளது. துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் சண்முகம், ஓய்வு வங்கி அதிகாரி, உத்தமபாளையம்: முதலில் சர்வே செய்து நான்கு மால் நிர்ணயம் செய்ய வேண்டும். -கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி முழு அளவில் தண்ணீர் தேக்க வேண்டும். முழுமையாக நீர் தேங்காததால் பாளையம் பரவு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகாயத்தாமரையை அகற்ற கல்லூரி என். சி.சி., மற்றும் என்.எஸ். எஸ். மாணவர்களின் உதவியை நாடலாம். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சாகுபடிக்கு பயன்படும் இந்த கண்மாயை முழுமையாக பராமரிப்பு செய்ய நீர்வளத்துறையினர் முன்வர வேண்டும்.






      Dinamalar
      Follow us