/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு 10,556 பேர் எழுத ஏற்பாடு
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு 10,556 பேர் எழுத ஏற்பாடு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு 10,556 பேர் எழுத ஏற்பாடு
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு 10,556 பேர் எழுத ஏற்பாடு
ADDED : செப் 25, 2025 04:51 AM
தேனி : மாவட்டத்தில் 3 தாலுகாக்களில் செப்., 28 ல் நடக்கும் குரூப் 2, 2ஏ தேர்வினை 10,556 பேர் எழுத ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய 3 தாலுக்காக்களுக்கு உட்பட்ட 28 அமைவிடங்களில் 40 மையங்களில் 10,556 பேர் குரூப் 2, 2ஏ தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேர்வை கண்காணிக்க 14 கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை, 40 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர தேர்வினை பதிவு செய்ய 43 வீடியோ கிராபர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்விற்கான வினாத்தாள்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அங்கிருந்து தாலுகா அலுவலகங்களில் உள்ள கருவூலங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.