/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நண்பரை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்
/
நண்பரை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்
ADDED : செப் 25, 2025 04:49 AM

தேனி : தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, மேலமஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேஷ் 32,என்பவரை கொலை செய்த கீழமஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி பாபு 35,விற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கீழமஞ்சிநாயக்கன்பட்டி விவசாயி பாபு 36. மேலமஞ்சிநாயக்கன்பட்டி ராஜேஷ் 32. கூலித்தொழிலாளி. இருவரும் நண்பர்கள். இருவரும் தினமும் மது குடிப்பது வழக்கம். 2021 பிப்.,23ல் இரவு கீழமஞ்சிநாயக்கன்பட்டிமேலமஞ்சிநாயக்கன்பட்டிக்கு இடையே உள்ள பாலத்தில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது அங்கு சென்ற பாபுவின் தந்தை வடிவேல், இருவரையும்கண்டித்து, ராஜேஷிடம், இனி என் மகனுடன் சேரக்கூடாது' என்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ், பாபுவின் தந்தை வடிவேலுவிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டார். பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாபுவை கண்டித்தார். அதன் பின் திரும்பி வந்த பாபு, ராஜேஷிடம் தகராறு செய்து காலால் உதைத்து பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.
கீழே விழுந்த ராஜேஷ் மயங்கினார். மறுநாள் காலையில்பலத்த காயங்களுடன் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 2021 மார்ச் 1ல் ராஜேஷ் இறந்தார். வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார்.அரசு வழக்கறிஞராக பாஸ்கரன் ஆஜரானார்.