/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உப்புத்துறை வழியாக சதுரகிரி செல்லும் பக்தர்களை கண்காணிக்க ஏற்பாடு
/
உப்புத்துறை வழியாக சதுரகிரி செல்லும் பக்தர்களை கண்காணிக்க ஏற்பாடு
உப்புத்துறை வழியாக சதுரகிரி செல்லும் பக்தர்களை கண்காணிக்க ஏற்பாடு
உப்புத்துறை வழியாக சதுரகிரி செல்லும் பக்தர்களை கண்காணிக்க ஏற்பாடு
ADDED : ஜூலை 24, 2025 06:24 AM
கடமலைக்குண்டு : ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு உப்புத்துறை வழியாக செல்லும் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை மற்றும் போலீசார் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
ஆடி அமாவாசை நாளில் விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியம் உப்புத்துறை வழியாக சதுரகிரி கோயிலுக்கு செல்வதற்கு மலைப்பாதை உள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் தேனியில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் உப்புத்துறைக்கு இயக்கப்படும். அங்கு வரும் பக்தர்கள் மாளிகைப்பாறை கருப்பசாமி, வாய்க்கால் பாறை பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்து, மலைப்பாதை வழியாக சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்வது வழக்கம்.
இந்த ஆண்டும் மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்கள் தீப்பெட்டி, பிளாஸ்டிக், பாலித்தீன், சிகரெட், பீடி மற்றும் மதுபான பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பஸ் மற்றும் தனியார் வாகனங்களில் உப்புத்துறை வரை செல்லும் பக்தர்களை தீவிரமாக கண்காணிக்கவும், வனப்பகுதியில் பாதுகாப்பு குறித்தும் போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.