sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு

/

வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு

வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு

வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு


ADDED : செப் 17, 2025 03:44 AM

Google News

ADDED : செப் 17, 2025 03:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி : வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெரியகுளம் வனசரகர் செல்வராணி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: வனத்துறை சார்பில் உயிர்பன்மை பாதுகாப்பு, பசுமையாக்குதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெரியகுளம் வனசரகம் சார்பில் தேனி அன்னஞ்சி விலக்கு பைபாஸ் ரோட்டில் உள்ள நாற்றங்கால் மையத்தில் தேக்கு, குமிழ், மகாகனி, செம்மரம், பலா, பாதாம், புங்கன், நாவல், வேம்பு, மகிழம் மர கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள், கல்வி, தனியார் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் பட்டா, சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் ஒருவருக்கு 400 மரக்கன்றுகள் வரை வழங்கப்படும். கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் இலவச மரக்கன்றுகள் பெற விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 100 மரக்கன்றுகள் வழங்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வனசரக அலுவலகத்திற்கு உட்பட்ட நாற்றங்கால் மையங்களிலும் இலவச மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.

இலவச மரக்கன்றுகள் பெற 80567 07624 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பெரியகுளம் சரக நாற்றங்கால் பண்ணையில் சுமார் 22,500 மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளன என்றார்.






      Dinamalar
      Follow us