/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உழவர் நல சேவை மையங்கள் துவக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்க ஏற்பாடு
/
உழவர் நல சேவை மையங்கள் துவக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்க ஏற்பாடு
உழவர் நல சேவை மையங்கள் துவக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்க ஏற்பாடு
உழவர் நல சேவை மையங்கள் துவக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்க ஏற்பாடு
ADDED : நவ 03, 2025 04:30 AM
கம்பம்: வேளாண், தோட்டக்கலை பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள், உழவர் நல சேவை மையங்கள் துவக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. விரும்புவோர் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அதிகாரிகள் கூறியதாவது: உரம், பூச்சி மருந்துகள், விதை விற்பனை செய்யவும், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, டிராக்டர், பவர் டில்லர் போன்ற வேளாண் கருவிகளை வாடகைக்கு விடவும் வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை தொடர்பாக உழவர் நல சேவை மையங்கள் துவங்க வேளாண் வணிகத்துறைக்கு விண்ணப்பிக்கலாம்.
ரூ.10 லட்சம் திட்ட மதிப்பீடு என்றால் ரூ.3 லட்சம் மானியம், ரூ.20 லட்சம் மதிப்பீடு என்றால் ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. ரூ.10 லட்சம் மதிப்பீட்டிற்கு 300 சதுர அடி, ரூ.20 லட்சம் மதிப்பீட்டிற்கு 600 சதுர அடி இடம் காட்ட வேண்டும். முன்னதாக திட்ட அறிக்கை தயார் செய்து ஏதாவது ஒரு வங்கியில் வழங்கி, கடன் பெற சம்மதம் பெற வேண்டும். அவ்வாறு வங்கி சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அரசு தரும் மானியம் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு செய்யப்படும். வட்டாரம் தோறும் 10 க்கும் மேற்பட்ட உழவர் சேவை மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளன.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது அந்தந்த வட்டார உதவி இயக்குநர்களை சந்தித்து விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

