/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கைலாய கீழச்சொக்கநாதர் கோயில் பாலாலய பூஜை
/
கைலாய கீழச்சொக்கநாதர் கோயில் பாலாலய பூஜை
ADDED : நவ 03, 2025 04:29 AM

போடி: போடி அருகே கைலாய கீழச்சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாலாலய பூஜைகள் நேற்று நடந்தது.
போடி பிச்சாங்கரை மலைப் பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன் சித்தர்களால் கட்டப்பட்ட கைலாய கீழச்சொக்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் ஆகிறது.
இதனை முன்னிட்டு கோயில் புனரமைப்பு, விரைவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு கட்டட பணிகள் துவங்க உள்ளன.
நேற்று அறங்காவலர் குழு தலைவர் பாண்டி சுந்தரபாண்டியன் தலைமையில் கோயிலில் பாலாலய பூஜை நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.
சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. அறங்காவலர் குழு நிர்வாகிகள் செந்தில்குமார், கணேசன், செல்வராஜ், சிவமுரளி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக கட்டடப் பணிகள் முடியும் வரை பிரதோஷம், அமாவாசை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

