ADDED : நவ 03, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் மாநில, மாவட்ட, ஒன்றிய புதிய நிர்வாகிகள் அறிமுகம், தேர்தல் செயல் பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் ராசிங்காபுரத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் பாண்டியன், மாவட்டப் பொதுச் செயலாளர் வினோத், மாவட்டத் துணை தலைவர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தனர். போடி மேற்கு மண்டல தலைவர் ரவி வரவேற்றார்.
போடி ஒன்றிய முன்னாள் மண்டல தலைவர் சஞ்சீவி கணேசன், ஒன்றியப் பொதுச் செயலாளர்கள் தாமோதரன், முருகன், பொருளாளர் கணேஷ் அப்பாரு, சென்ராயன் மாவட்ட மகளிர் அணி தலைவி ஜீவாபாண்டீஸ்வரி உட்பட மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

