ADDED : நவ 03, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ஆதிதிராவிடர், பழங்குடியினர் இலக்கிய திறனை மேம்படுத்த ஆதிதிரா விடர், பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் துவங்கப்பட்டு உள்ளது.
இச்சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து தலா ரூ.ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதே சமூகத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், சமூகத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 11 பேருக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளது.
தகுதி உள்ள எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நவ.,28 மாலை 5:00 மணிக்குள் நேரடியாக அல்லது தபால் மூலம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் வழங்க வேண்டும் என, கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

