/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் படகு குழாம் மீண்டும் செயல்பட ஏற்பாடு
/
வைகை அணையில் படகு குழாம் மீண்டும் செயல்பட ஏற்பாடு
ADDED : ஜூலை 09, 2025 07:53 AM

ஆண்டிபட்டி : வைகை அணை வலதுகரை பகுதியில் முடங்கி கிடந்த படகு குழாமை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடமாக வைகை அணை உள்ளது. கொடைக்கானல், கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் வைகை அணை பார்த்து செல்ல தவருவதில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வைகை அணை வலது கரையில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல லட்சம் செலவில் படகு குழாம் துவக்கப்பட்டது.
படகு குழாமில் பெடல் மூலம் இயக்கப்படும் பைபர் படகுகளில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் சென்று மகிழ்ந்தனர். வைகை அணை நீர்வளத்துறையினர் இதனைத் தொடர்ந்து பராமரிக்காததால் சில மாதங்களில் மூடப்பட்டது.
தற்போது தனியார் மூலம் படகு குழாமை மீண்டும் இயக்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. படகு குழாம் தொட்டிகள் சீரமைக்கப்பட்டு புதிதாக பெயின்டிங் செய்யப்பட்டுள்ளது. பழுதான நிலையில் இருந்த பைபர் படகுகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் படகு குழாம் புதுப்பொலிவுடன் சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டிற்கு வரும் என்று நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.

