/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நவ.29ல் ஊரக திறனாய்வு தேர்வு எட்டு மையங்களில் எழுத ஏற்பாடு
/
நவ.29ல் ஊரக திறனாய்வு தேர்வு எட்டு மையங்களில் எழுத ஏற்பாடு
நவ.29ல் ஊரக திறனாய்வு தேர்வு எட்டு மையங்களில் எழுத ஏற்பாடு
நவ.29ல் ஊரக திறனாய்வு தேர்வு எட்டு மையங்களில் எழுத ஏற்பாடு
ADDED : நவ 22, 2025 03:40 AM
தேனி: ஊரக பகுதிகளில் மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தவும், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி அவர்களை உயர்கல்வி பயில வழிகாட்ட ஊரக திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
தேனி மாவட்ட ஊரக திறனாய்வுத் தேர்வு நவ.29ல் நடக்க உள்ளது. இதற்காக நகராட்சிகள் தவிர்த்து, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் 1603 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். இவர்கள் தேர்வு எழுத பெரியகுளம் வி.எம். ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டிபட்டி ஆண்கள், மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, ராயப்பன்பட்டி புனித ஆக்னஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி., மேல்நிலைப்பள்ளி, போடி ஜமின்தாரணி காமுகம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளி உட்பட 8 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடக்க உள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தேர்வு நவ.29 காலை 10:00 மணிக்கு துவங்கும். தேர்வு ஹால் டிக்கெட்டுடன், கறுப்பு நிற பால் பாயிண்ட் பேனா கொண்டு வர வேண்டும். தேர்வு 12:30 மணி வரை நடக்க உள்ளது.
ஓ.எம்.ஆர்., நடைமுறையில் விடையளிக்கும் நடைமுறையில் தேர்வு நடைபெற உள்ளது. அரை மணி நேரத்திற்கு முன் தேர்வு அறைக்கு வந்து விட வேண்டும். இத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு பிளஸ் 2வரை ஆண்டுக்கு ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என்றனர்.

