/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நிலக்கடலையில் அதிக மகசூல் பெற விதை நேர்த்தி அவசியம்
/
நிலக்கடலையில் அதிக மகசூல் பெற விதை நேர்த்தி அவசியம்
நிலக்கடலையில் அதிக மகசூல் பெற விதை நேர்த்தி அவசியம்
நிலக்கடலையில் அதிக மகசூல் பெற விதை நேர்த்தி அவசியம்
ADDED : நவ 22, 2025 03:18 AM
தேனி: நிலைக்கடலை சாகுபடி அதிக மகசூல் பெற விதை நேர்த்தி அவசியம் என விதைப்பரிசோதனை அலுவலர் சிவகாமி, வேளாண் அலுவலர்கள் சதீஸ், மகிஷாதேவி தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: நல்ல விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக நிலக்கடை விதைகள் 70 சதவீத முளைப்புத்திறன் உள்ளதை விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். நிலக்கடலையை மண்மூலம் பரவும் நோய்களான வேர் அழுகல், தண்டு அழுகல் அதிகம் பாதிக்கின்றன. இதனை தவிர்க்க ஒரு கிலோ நிலக்கடலை விதையுடன் உயிர் கொல்லிகளான டிரைக்கோடெர்மா வீரிடி அல்லது டி.ஹார்சியானத்தை 4 கிராம் அல்லது சூடோமோனஸ் 10 வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதன் மூலம் சுமார் 30 நாட்களுக்கு பயிர் பாதுகாப்பு கிடைக்கும். விதையை அரிசி கஞ்சியை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம். பின் நிழலில் உலர்த்தி விதைப்பிற்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து விதைகள் பாதுகாக்கப்பட்டு அதிக மகசூல் கிடைக்கும் என்றனர்.

