ADDED : நவ 21, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: பூதிப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை (நவ.22) பொது மருத்துவம், அறுவைசிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு பெண்கள் நலம், குழந்தைகள் நலன், இருதய நோய் பிரிவு, தோல், பல், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை, மனநல மருத்துவம் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள், இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சோனோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன.
பல்வேறு வகையான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் ஆதார், நலவாரிய அடையாள அட்டை நகல், ஒய்வூதிய ஆணை நகல் ஆகியவற்றுடன் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் பங்கேற்று பயனடையலாம் என தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

