ADDED : நவ 21, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் 74 கூட்டுறவு சங்கங்கள், 170 தனியார் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த கடைகளில் உர கையிருப்பு, விற்பனை பதிவேடுகள் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக வேளாண் தரக்கட்டுபாடு உதவி இயக்குநர், வட்டார வேளாண் உதவி இயக்குநர் ஆய்வு செய்கின்றனர்.
கடமலைக்குண்டு மயிலாடும்பாறை பகுதியில் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் திலகர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில் 4 கடைகளில் உர இருப்பிற்கும், பதிவேட்டில் உள்ள இருப்பிற்கும் வேறுபாடு இருந்தது.
இதனால் குறிப்பிட்ட 4 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

