ADDED : மார் 17, 2024 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் நகராட்சியில் 12 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன.
3 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.273 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நகராட்சியில் குடிநீர் கட்டண நிலுவையாக ரூ.33 லட்சம் வசூல் ஆகாமல் உள்ளது. எனவே, நிலுவை தொகையினை வசூல் செய்ய நகராட்சிகளின் மண்டல இயக்குனர் உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சியில் உள்ள அனைத்து பணியாளர்களும் காலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை வார்டு, வார்டாக சென்று வசூல் செய்கின்றனர். நேற்று காலை 6 மணிக்கு நகராட்சி வளாகத்தில் கூடிய பணியாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாவில் சென்று வசூல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

