ADDED : பிப் 05, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் பூபதி ராஜா 35, இவர் 6ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு, பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரித்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் போதுமணி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
இதனைத் தொடர்ந்து பூபதிராஜாவை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.