ADDED : பிப் 20, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த நாகராஜ் மனைவி மகாலட்சுமி 45. தாமரைக்குளத்தில் பாக்யா ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
ஓட்டலில் தாமரைக்குளம் அம்பேத்கர் புதுகாலனியைச் சேர்ந்த சுரேஷ் 25. குஸ்கா கேட்டுள்ளார். பார்சலை மகாலட்சுமி சித்தப்பா பாண்டியன் கட்டிக்கொடுத்துள்ளார். குஸ்காவிற்கு பாண்டியன், சுரேஷிடம் பணம் கேட்டுள்ளார்.
சுரேஷ் இவரது நண்பர்கள் ஈஸ்வரன் 27. 18 வயது சிறுவர் உட்பட மூன்று பேரும் எங்ககிட்டேயே பணம் கேட்கிறயா என பாண்டியனை அடித்தும், கடையிலிருந்த சேர், டேபிள்களை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரை போலீசார் இருவரை கைது செய்தனர்.

