/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்கு வாருங்கள்
/
தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்கு வாருங்கள்
ADDED : ஜூலை 11, 2025 03:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தமிழகத்தில் நாளை (ஜூலை 12) டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் 108 மையங்களில் 27,158 பேர் எழுதுகின்றனர்.
தேர்வு மையத்திற்குள் அலைபேசி, உள்ளிட்ட பிற மின்னணு சாதனங்கள் அனுமதி இல்லை. தேர்வு மையத்திற்கு தேர்வர்கள் காலை 8:30 மணிக்குள் வர வேண்டும். மைய நுழைவாயில்கள் காலை 9:00 மணிக்கு மூடப்படும். அதற்கு பின் வருபவர்களுக்கு அனுமதி இல்லை. தேர்வு தொடர்பான விபரங்களுக்கு 78717 42115 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.