ADDED : ஆக 12, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.13–வடுகபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பெரியகுளம் வட்டார வள மையத்தில் 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு வட்டார கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.
போட்டிகளை சி.இ.ஓ., முருகன் துவக்கி வைத்தார். அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கவுதம் முன்னிலை வகித்தார். நடனம், நாடகம், இசைக்கருவி மீட்டல் உள்ளிட்ட 32 வகையான போட்டிகளில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினர். முதலிடம் வென்ற மாணவர்கள் ஆக., 20முதல் ஆக., 27 வரை நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். வட்டார வளமைய மேற்பாவையாளர் பாண்டியராஜ், கலைத்திருவிழா வட்டார ஒருங்கிணைப்பாளர் ரோகினி உள்ளிட்டோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
