ADDED : ஆக 12, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.13–தேனி வேளாண் உதவி இயக்குநர் நிவேஷ் கூறியதாவது: தேசிய உணவுப்பாதுகாப்பு, ஊட்டசத்து இயக்க திட்டத்தில் சோளம், கம்பு, மக்காச்சோள விதைகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன.
மக்காச்சோளம் ADVANTA-ADV 752 ரக விதை ஒரு கிலோவிற்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். ஒரு கிலோ விதை ரூ. 290க்கு விவசாயிகளுக்கு வழங்கப்படும். கம்பு, சோளம், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 ஏக்கரில் சாகுபடி செய்ய மானியத்தில் விதைகள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு தேனி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
