ADDED : செப் 26, 2026 04:52 AM
அ நிறம் | அளவு
தேனி: வீரபாண்டி எல்.எஸ்., மில் வளாகத்தில் மில் நிர்வாகம் சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கு இலவச செயற்கை கால்கள்,
சிறப்பு காலணி, சக்கர நாற்காலி வழங்கும் விழா நடந்தது. நிர்வாக இயக்குநர் மணிவண்ணன் தலைமை வகித்து உபகரணங்களை குழந்தைகளுக்கு வழங்கினார். தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின், இணை நிர்வாக இயக்குநர் சாந்தி முன்னிலை வகித்தனர். நிறுவன அதிகாரிகள் நிவாஸ், ஞானகுருசாமி, சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
