மண் அள்ளும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
மண் அள்ளும் இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
UPDATED : செப் 26, 2026 03:29 PM
ADDED : செப் 26, 2026 03:20 PM
தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: அக்.,1 முதல் பருவமழை முடியும் வரை அனைத்து அலுவலகங்களிலும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியாளர் இருக்க வேண்டும். வெள்ளம், இடி, மின்னல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். துணை கலெக்டர் தலைமையிலான குழுக்கள், சேத விபரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கி தயாராக வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறையின் 04545 261 093 அல்லது 1077 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். குமுளி, போடிமெட்டு மலைப்பாதைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். போடிமெட்டு, முந்தல் பகுதிகளில் மண்சரிந்தால் சீரமைக்க வசதியாக மண் அள்ளும் இயந்திரங்கள், உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை கணக்கிட்டு அகற்ற வேண்டும். டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றார். டி.ஆர்.ஓ., ராஜகுமார் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
