/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வடக்குமலை, அத்தியூத்து கிராமத்தில் மின் வசதி இன்றி இருளில் தவிப்பு
/
வடக்குமலை, அத்தியூத்து கிராமத்தில் மின் வசதி இன்றி இருளில் தவிப்பு
வடக்குமலை, அத்தியூத்து கிராமத்தில் மின் வசதி இன்றி இருளில் தவிப்பு
வடக்குமலை, அத்தியூத்து கிராமத்தில் மின் வசதி இன்றி இருளில் தவிப்பு
ADDED : டிச 30, 2025 05:52 AM
போடி: போடி வடக்குமலை, அத்தியூத்துக்கு மலைக் கிராமத்தில் மின் வசதி இல்லாததால் மக்கள் இருளில் தவிக்கின்றனர். சோலார் விளக்கு வசதி ஏற்படுத்திட விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது வடக்குமலை கிராமம். இங்கு அத்தியூத்து, இலங்கா வரிசை, வலசத்துறை, உரல்மெத்து, சித்தாறு, சாமிவாய்க்கால், போதன் ஓடை உட்கடை மலைக்கிராமங்கள் அடங்கி உள்ளன. வடக்குமலையில் 500 விவசாய குடும்பங்களும், 150க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு காபி, மிளகு, இலவம்,, ஏலம் போன்ற விவசாயம் செய்து வருகின்றனர்.
இப் பகுதி மலைக் கிராமங்களில் வீடுகளுக்கு மின் வசதி, தெருவிளக்கு வசதி இல்லாததால் இருளில் மூழ்கி உள்ளன. இங்குள்ளவர்கள் நோயால் பாதித்தால் மருத்துவ வசதி பெற 12 கி.மீ., தூரம் கடந்து போடிக்கு வர வேண்டும். போடி செல்ல முறையான ரோடு வசதி இல்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை டோலி கட்டி தூக்கி வர வேண்டும்.
விளை பொருட்களை தலைச்சுமையாகவும், கழுதைகள் மூலமும் கொண்டு வர வேண்டியுள்ளது.
மலைக் கிராமங்களுக்கு தெருவிளக்கு, மின் வசதி அல்லது தற்காலிகமாக சோலார் விளக்கு அமைத்திட மக்கள் பல ஆண்டுகளாக கோரி வரு கின்றனர்.

