/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சபரிமலை சிறப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்
/
சபரிமலை சிறப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்
சபரிமலை சிறப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்
சபரிமலை சிறப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர் மீது தாக்குதல்
ADDED : டிச 20, 2024 03:28 AM
மூணாறு: சபரிமலை சிறப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரர், கடைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்றபோது சோடா பாட்டிலால் தாக்கப்பட்டார். ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
இடுக்கி மாவட்டம் கரிமண்ணூரைச் சேர்ந்தவர் முகம்மது 29, மூணாறு போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர், சபரிமலை சிறப்பு பணியில் நியமிக்கப்பட்டதால், குட்டிக்கானம் பகுதியில் பணி செய்தார். புல்லுப்பாறை ஜங்ஷனில் இரு கடைக்காரர்கள் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது.
அதனை தடுக்கச் சென்ற முகம்மதுவை சோடா பாட்டிலால் தாக்கினர். அதில் பலத்த காயம் அடைந்தவரை, முண்டக்கயத்தில் மருத்துவமனையில் அனுமதித்தனர். புல்லுப்பாறையை சேர்ந்த ஷாஜி 55, மகன் அர்ஜூனன் 20, சகோதரன் சுஜின் 34, மற்றும் சுஜித் 38, ஜூபிஜோய் 31, ஆகியோரை கைது செய்து ஒருவரை தேடி வருகின்றனர்.