/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுற்றுலா பஸ் டிரைவர் மீது தாக்குதல்: இருவர் மீது வழக்கு
/
சுற்றுலா பஸ் டிரைவர் மீது தாக்குதல்: இருவர் மீது வழக்கு
சுற்றுலா பஸ் டிரைவர் மீது தாக்குதல்: இருவர் மீது வழக்கு
சுற்றுலா பஸ் டிரைவர் மீது தாக்குதல்: இருவர் மீது வழக்கு
ADDED : டிச 28, 2024 07:02 AM
மூணாறு :  மூணாறில்  அரசு சுற்றுலா பஸ் டிரைவரை தாக்கிய சம்பவத்தில் இரண்டு ஆட்டோ டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கேரளாவில் அரசு போக்குவரத்து கழகத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்க சில 'டிப்போ' க்களில் இருந்து மூணாறு உள்பட சுற்றுலா பகுதிகளுக்கு ' பேக்கேஜ்' முறைபடி சுற்றுலா பஸ்கள் இயக்கப்படுகின்றன. அது போன்று பத்தனம்திட்டா டிப்போவில் இருந்து மூணாறுக்கு வந்த சுற்றுலா பஸ்சை, பத்தனம்திட்டாவை சேர்ந்த டிரைவர் அபிலாஷ்குமார் 40, ஓட்டி வந்தார்.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை புறவழி  சாலையில் பழைய மூணாறு பகுதியில்   ஆட்டோவை ரோட்டின் குறுக்கே நிறுத்தி பஸ்சை வழிமறித்த சிலர் டிரைவர் அபிலாஷ்குமாரை வலுகட்டாயமாக வெளியில் இழுத்து பலமாக தாக்கினர். அதனை தட்டிக் கேட்ட  சுற்றுலா பயணிகளை ஆபாசமாக திட்டி விரட்டினர்.
இச்சம்பவம் தொடர்பாக மூணாறு காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் அரவிந்த்மணி 25, சுபாஷ் 40, ஆகியோர் மீது மூணாறு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். ஆட்டோ மீது உரசிய பஸ் நிற்காமல் சென்றதால் வழிமறித்து டிரைவரை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்தது.

