/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்களுக்கு எதிரான தாக்குதல் சமூகத்தின் மீதான தாக்குதல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு

ADDED : ஜூலை 13, 2025 12:35 AM

தேனி:'பெண்களுக்கு எதிரான தாக்குதல் தனி மனித தாக்குதல் அல்ல சமூகத்தின் மீதான தாக்குதல்,'என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசினார்.
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லுாரியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், மஞ்சுளா, ஸ்ரீமதி, ஜோதிராமன், தேனி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன், கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
தலைமை நீதிபதி பேசுகையில், 'பெண்களுக்கு எதிராக உடல், மன, பொருளாதார ரீதியாக கொடுமைகள் நடக்கிறது. பெண்களுக்கு எதிரான தாக்குதல் தனிமனித தாக்குதல் அல்ல சமூகத்தின் மீதானது.
விசாக கமிட்டி பெண்களுக்கான விழிப்புணர்வு, நீதிதன்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. பெண்களை கடவுளாக வணங்கி வருகிறோம். வீடுகளில் பெற்றோர்களிடமிருந்து குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். வீட்டில் பெண்களை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதை குழந்தைகள் கவனிக்கின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதில் நீதிமன்றங்கள் அரணாக உள்ளன.
எந்த ஒரு மாற்றத்திற்கும் கல்வியும், விழிப்புணர்வு முக்கியமாகும்.
போலீசார் இங்கு விழிப்புணர்வுக்காக அமைத்துள்ள அரங்கு போன்று சினிமா தியேட்டர்கள், கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என்றார்.