/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவர் மீது தாக்கு
/
கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவர் மீது தாக்கு
ADDED : பிப் 16, 2024 06:14 AM
ஆண்டிபட்டி: பெரியகுளம் சங்கரமூர்த்திபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் 38, தனியார் மில்லில் பணிபுரிந்து வருகிறார்.
இரு ஆண்டுக்கு முன் முத்தனம்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டியன் என்பவரிடம் பசுமாடு வாங்குவதற்காக ரூ.2 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை மாடு வாங்கித்தரவில்லை. இதனைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு முன் சுரேஷ் அவரது உறவினர் சின்னச்சாமியுடன் சென்று செல்லப்பாண்டியனிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் செல்லப்பாண்டியன் மற்றும் சிலர் தாக்கியதில் காயம் அடைந்த சுரேஷ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரில் க.விலக்கு எஸ்.ஐ., பிரபா விசாரித்து வருகிறார்