ADDED : நவ 23, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: லட்சுமிபுரம் பகுதியில் பழமையான புளியமரத்தை வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியகுளம் தேனி ரோடு லட்சுமிபுரம் பகுதியில் ரோட்டோரம் 40 வயதுடைய புளிய மரம் மண் அள்ளும் இயந்திர வாகனத்தில் வேரோடு தோண்டி சாய்க்கப்பட்டது. உதவி செயற்பொறியாளர் சரவணன் புகாரில், தென்கரை இன்ஸ்பெக்டர் மரத்தை வெட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அமைத்து தேடி வருகிறார்.

