/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துப்பாக்கி, தோட்டாவுடன் வேட்டையாட முயற்சி: இரண்டு பேர் கைது
/
துப்பாக்கி, தோட்டாவுடன் வேட்டையாட முயற்சி: இரண்டு பேர் கைது
துப்பாக்கி, தோட்டாவுடன் வேட்டையாட முயற்சி: இரண்டு பேர் கைது
துப்பாக்கி, தோட்டாவுடன் வேட்டையாட முயற்சி: இரண்டு பேர் கைது
ADDED : டிச 27, 2025 04:27 AM

போடி: தேனி மாவட்டம் போடி அருகே கொட்டகுடி காப்புக்காடு வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற பொன்னுச்சாமி 62, சிவக்குமார் 29, ஆகியோரை நாட்டு துப்பாக்கி, தோட்டாவுடன் வனத்துறையினர் கைது செய்தனர்.
போடி அருகே கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி, சூலப்புரத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்.
இருவரும் நேற்று போடி அருகே கொட்டகுடி காப்புக்காடு வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றனர். அப்பகுதியில் போடி ரேஞ்சர் நாகராஜ், வனவர்கள் அன்பரசன், நாகராஜ், பிரகாஷ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வேட்டையாட முயன்ற பொன்னுச்சாமி, சிவக்குமாரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் வன விலங்குகளை வேட்டையாட அவர்கள் முயன்றது தெரிந்தது.
வனத்துறையி னர் அவர்களை கைது செய்து ஒரு நாட்டுதுப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி, மண்வெட்டி, ஹெட்லைட், அலைபேசிகள், டூவீலர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.