/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவர் குளிர்கால முகாம் துவக்கம்
/
மாணவர் குளிர்கால முகாம் துவக்கம்
ADDED : டிச 26, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: சமூக நலத்துறை சார்பில் போடி ஜ.கா.நி., மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால முகாமை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் துவக்கி வைத்தார்.
அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு முகாமில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நாட்டுப்புற நடனம், பாரம்பரிய நடனம், ஓவியம், பாடுதல், சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகள், யோக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. முகாம் ஜன.4 வரை நடக்க உள்ளது. விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளாதேவி, தாசில்தார் சந்திரசேகரன், ஆர்.ஐ., விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

