ADDED : அக் 26, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி --மதுரை ரோடு, ஒன்றிய அலுவலகம் அருகே ஸ்டேட் பாங்க் உள்ளது.
நேற்று முன் தினம் இரவில் பாங்க் முன்பு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இருவர் கண்காணிப்பு கேமரா ஒயரை துண்டித்து வங்கியின் முன்னால் இருந்த இரும்பு கேட்டை கம்பியால் உடைத்து திருட முயற்சித்துள்ளனர்.
பாங்க் அருகில் குடியிருந்து வரும் கண்ணன் என்பவர் டீ குடிப்பதற்காக அப்போது வந்துள்ளார்.
இந் நிகழ்வை கண்ட கண்ணன் சப்தம் போட்டவுடன் மர்ம நபர்கள் ஓடி விட்டனர். இது குறித்து கண்ணனிடம் விவரம் கேட்ட வங்கி துணை மேலாளர் விக்டோரியா பாலன் ஆண்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட முயன்ற மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.