/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒரே நாளில் 3 இடங்களில் திருட்டு முயற்சி
/
ஒரே நாளில் 3 இடங்களில் திருட்டு முயற்சி
ADDED : நவ 17, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் அன்பரசன் 67, ராஜேஸ்குமார் 28, ஆகியோர்களின் ஸ்டேஷனரி கடைகளில் இரவில் பூட்டை உடைத்து கடைகளுக்குள் திருடர்கள் புகுந்துள்ளனர். பணம், விலை உயர்ந்த பொருட்கள் கடையில் இல்லாததால் அங்கிருந்து சென்று விட்டனர். ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் ரோட்டில் உள்ள விநாயகர் கோயிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூபாய் நோட்டுகளை மட்டும் எடுத்து சென்றுள்ளனர்.
ஒரே நாளில் மூன்று இடங்களில் நடந்த திருட்டு சம்பவம் ஆண்டிபட்டியில் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

