/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வண்டிப்பெரியாறில் பரிசல் சவாரிக்கு வனத்துறை தடை
/
வண்டிப்பெரியாறில் பரிசல் சவாரிக்கு வனத்துறை தடை
ADDED : நவ 17, 2025 12:43 AM

கூடலுார்: கேரள மாநிலம் வண்டிப்பெரியாறு அருகே முல்லைப்பெரியாற்றில் ஊராட்சி சார்பில் இயக்கப்படும் பரிசல் சவாரிக்கு கேரள வனத்துறை தடை விதித்துள்ளது.
வண்டிப்பெரியாறு ஊராட்சி சார்பில் வள்ளக்கடவு குரிசுமூகுடு பகுதியில் உள்ள முல்லைப் பெரியாற்றில் 200 மீட்டர் துாரத்திற்கு பரிசல் சவாரிக்கான திட்டம் சமீபத்தில் துவக்கி வைக்கப் பட்டது.
இத்திட்டத்தின் மூலம் தேக்கடி, சத்திரம், கெவி, பருந்துப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு பரிசல் சவாரி பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த பரிசல் சவாரி வனவிலங்குகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், தடை விதித்து வண்டிப் பெரியாறு ஊராட்சி நிர்வாகத்திற்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் பரிசல் சவாரி தடை விதிக்கப்பட்டு, தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

