/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆட்டோவிற்கு தீ வைப்பு: 5 பேர் கைது
/
ஆட்டோவிற்கு தீ வைப்பு: 5 பேர் கைது
ADDED : நவ 02, 2024 08:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்,: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் தினேஷ் 30. அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன் 34. இருவருக்கும் இடையே சில தினங்களுக்கு முன் பிரச்னை ஏற்பட்டது.
முன் விரோதம் காரணமாக ராஜசேகரன், தினேஷ் வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஆட்டோ மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தினேஷ் தண்ணீர் ஊற்றி அணைத்தார். தென்கரை எஸ்.ஐ., ஜீவானந்தம், ராஜசேகரனை கைது செய்தார்.
--ராஜசேகரன் புகாரில், 'ஆட்டோ டிரைவர் தினேஷ், இவரது நண்பர்கள் கண்ணன், தர்மர், மதன் ஆகியோர் தன்னை அவதூறாக பேசி கட்டை மற்றும் செருப்பால் அடித்ததாக புகார் செய்தார். தென்கரை எஸ்.ஐ., தினேஷ் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

