/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆட்டோ சங்க நிர்வாகிகள் மோதல்: 9 பேர் மீது வழக்கு
/
ஆட்டோ சங்க நிர்வாகிகள் மோதல்: 9 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 26, 2025 06:46 AM
பெரியகுளம் : ஆட்டோ சங்கம் பொது பணம் ரூ.3 லட்சத்தை செலவு செய்த விவகாரத்தில் முன்னாள், இந்நாள் ஆட்டோ சங்க நிர்வாகிகள் இடையே கராறு நடந்தது. போலீசார் இரு தரப்பைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செல்வராஜ். இவர் ஆட்டோ நிலையத்தில் முன்னாள் தலைவர். சங்க பொது பணத்தை செலவு செய்துவிட்டார்.
இதனை தற்போதைய தலைவர் திரவியம், இவரது நண்பர்கள் ஜெயச்சந்திரன், பாலா, நந்தகுமார் உட்பட 5 பேர் பணத்தை திரும்ப கேட்டு செல்வராஜ் பெட்டிக்கடையில் கற்களை எரிந்து, கொலை மிரட்டல் விடுத்தனர்.
செல்வராஜ் மனைவி செல்வி புகாரில் திரவியம் உட்பட 5 பேர் மீது தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
திரவியம் புகாரில், சங்க தலைவராக உள்ளேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் செல்வராஜ் தலைவராக இருந்த போது சங்க பொது பணம் ரூ.3 லட்சம் திருப்பி தரவில்லை. வரவு, செலவு நோட்டை ஒப்படைக்கவில்லை.
இது குறித்து கேட்ட போது செல்வராஜ், இவரது மனைவி செல்வி, மகன்கள் பார்த்திபன், தினேஷ் ஆகியோர் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இவரது புகாரில் செல்வராஜ் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

