ADDED : ஆக 25, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆட்டோ டிரைவர் தங்கமலை 43, இரு நாட்களுக்கு முன்பு இரவில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இப்பள்ளி வளாகத்தில் இரு நாட்களுக்கு முன் உடலில் பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் இறந்து கிடந்த ஆட்டோ டிரைவரின் உடலை மீட்டு ராஜதானி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தெப்பம்பட்டியை சேர்ந்த அஜித்குமார் 27, என்பவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்தும் இக்கொலையில் தொடர்புடைய மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.