/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இலவச ரேஷன் அரிசியை ரூ.100 செலவில் கொண்டு வரும் அவலம் தேனி நகராட்சி ராகவன் காலனி மக்கள் புலம்பல்
/
இலவச ரேஷன் அரிசியை ரூ.100 செலவில் கொண்டு வரும் அவலம் தேனி நகராட்சி ராகவன் காலனி மக்கள் புலம்பல்
இலவச ரேஷன் அரிசியை ரூ.100 செலவில் கொண்டு வரும் அவலம் தேனி நகராட்சி ராகவன் காலனி மக்கள் புலம்பல்
இலவச ரேஷன் அரிசியை ரூ.100 செலவில் கொண்டு வரும் அவலம் தேனி நகராட்சி ராகவன் காலனி மக்கள் புலம்பல்
ADDED : மார் 12, 2024 11:46 PM

தேனி: தேனி நகராட்சி 30 வார்டு ராகவன் காலனிகுடியிருப்போர் ரேஷன் பொருட்களை பெரியகுளம் ரோட்டில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடையில் வாங்கி அதனை ரூ.100 செலவு செய்து ஆட்டோவில் கொண்டு வரும் அவல நிலையில் உள்ளனர். குடியிருப்பில் இருந்து அதிக துாரத்தில் ரேஷன் கடை அமைந்துள்ளதால் அப் பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 30வது வார்டில் ஆற்றங்கரைத்தெரு, ஷாகிப்தெரு, சுப்பன்செட்டி தெரு, தியேட்டர் ரோடு, ராகவன் காலனி உள்ளிட்ட 8 தெருக்கள் உள்ளன. இத்தெருக்களில் சுப்பன்தெருவில் வாகனங்களை விதிமீறி நிறுத்துவதால், அப்பகுதி போக்குவரத்து நெரிசலால் தினமும் அவதிக்குள்ளாகுகிறது. அத் தெருவிற்கு அருகே அமைந்துள்ள குடியிருப்பு பகுதி ராகவன் காலனி. இப்பகுதி பொதுமக்கள் சரோஜா, ஆதிலட்சுமி, நாகரத்தினம், விஜயா ஆகியோர் தினமலர் நாளிதழின் குடியிருப்போர் குரல் பகுதிக்காக பேசியதாவது:
ராகவன் காலனி பகுதி பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் அமைந்திருந்தாலும் வீட்டிலிருந்து பிற பகுதிக்கு சென்று வர வேண்டுமானால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, பலமணிநேரம் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது. இப்பகுதியில் ரேஷன் கடை அருகில் இல்லை. இதனால் பெரியகுளம் ரோடு மேற்குசந்தை அருகே உள்ள தொடக்க கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குகிறோம். போக்குவரத்து நெருக்கடியான இப் பகுதியை கடந்து முதியோர், வயதானவர்கள் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதியினர் வாகன விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ரேஷனில் இலவச பொருட்களை வாங்கி ஆட்டோவிற்கு ரூ.100 கொடுத்து கொண்டு வரும் நிலை உள்ளது. பல நேரங்களில் இப்பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி ஆட்டோக்கள் வர மறுக்கின்றனர்.
தெருநாய்கள் தொல்லை அதிகம்
இப்பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் இரவில் மற்ற பகுதிகளுக்கு செல்வதும், வேலை முடித்து வீடு திரும்புவோரும் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. சாக்கடை துார்வாரும் பணியில் அதில் உள்ள மணலை எடுத்து ரோட்டில் போடுகின்றனர். அதனை உடனே அப்புறப்படுத்தாமல் விட்டு செல்கின்றனர். அவை மீண்டும் சாக்கடையில் விழுகிறது. வீடுகளில் குப்பை வாங்குவதற்கு போதிய அளவில் துாய்மைப்பணியாளர்கள் நியமிக்கவில்லை. பணியாளர்கள் இருநாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டும் வீடுகளில் குப்பை தேங்கி சிரமம் ஏற்படுகிறது.
ரோட்டில் சில ஆண்டுகளுக்கு முன் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. அவை தற்போது மேடும் பள்ளங்களாக உள்ளன. இதில் நடந்து செல்லும் பலர் தடுமாறி விழுகின்றனர்.
மீண்டும் சிமென்ட ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாக்காடை துார்வாராத இடங்களில் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. கொசுமருந்து தெளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

