/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அதிக உப்பு சத்துள்ள நீரை பருக தடை இருந்தும் பயன்படுத்தும் அவலம் திருமலாபுரம் ஊராட்சியில் நிதி இருந்தும் வளர்ச்சி பணிகள் முடக்கம்
/
அதிக உப்பு சத்துள்ள நீரை பருக தடை இருந்தும் பயன்படுத்தும் அவலம் திருமலாபுரம் ஊராட்சியில் நிதி இருந்தும் வளர்ச்சி பணிகள் முடக்கம்
அதிக உப்பு சத்துள்ள நீரை பருக தடை இருந்தும் பயன்படுத்தும் அவலம் திருமலாபுரம் ஊராட்சியில் நிதி இருந்தும் வளர்ச்சி பணிகள் முடக்கம்
அதிக உப்பு சத்துள்ள நீரை பருக தடை இருந்தும் பயன்படுத்தும் அவலம் திருமலாபுரம் ஊராட்சியில் நிதி இருந்தும் வளர்ச்சி பணிகள் முடக்கம்
ADDED : பிப் 17, 2024 06:08 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜி.கல்லுப்பட்டி, பாலசமுத்திரம் கிராமங்களில் பொதுமக்கள் குடிநீர், வடிகால், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி இன்றி திண்டாடுகின்றனர்.
இவ் ஊராட்சியில் 13 குக்கிராமங்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் கூட்டுறவு நூற்பாலை, தொழிற்கூடங்கள், கல்குவாரிகளை உள்ளடக்கி உள்ளது. இந்த ஊராட்சியில் 6000க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
ஊராட்சியில் இருந்து சில கி.மீ., தூரத்தில்குன்னூர் ஆறு, வைகை அணை இருந்தும் பல கிராமங்களில் குடிநீர் கிடைக்காமல் போர்வெல் நீரான உப்புநீரை குடிநீராக பயன்படுத்துகின்றனர்.நிதி ஆதாரம் இருந்தும் ஊராட்சி நிர்வாகம் குறித்து தனி நபர்களின் தவறான புகார்களால் பல பணிகள் முடங்கி கிடக்கிறது. அடிப்படை வசதிகள் மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. பொதுமக்கள் கூறியதாவது:
முடங்கிய கூட்டு குடிநீர் திட்டம்
மணி, ஜி.கல்லுப்பட்டி:இக்கிராமத்திற்கு குன்னூர் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் இருந்தது. பல ஆண்டுக்கு முன் செயல்படுத்தப்பட்ட திட்டம் தற்போது செயல் இழந்ததால் இக்கிராமம் குடிநீரின்றி தவிக்கிறது.போர்வெல் உப்பு நீரை அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்துகிறோம்.வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் குடியிருப்புகளில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. ஏற்கனவே இருந்த மழைநீர் வடிகால் துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாய நிலங்களில் தேங்கும் நீரை கடத்த முடியவில்லை.
தடை செய்த நீரை பருகும் அவலம்
நடராஜ், ஜி.கல்லுப்பட்டி:சில மாதத்திற்கு முன் இக்கிரமத்தில் நிலத்தடி நீரின் தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இப்பகுதியில் நிலத்தடி நீரில் உப்பு சத்து அதிகம் இருப்பதால் இதனை குடிப்பதற்கு பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தினர். கூட்டுக் குடிநீர் வினியோகம் இல்லாததால் போர்வெல் நீரையே தொடர்ந்து பயன்படுத்துகிறோம்.இப்பகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்தில் தூய்மை பணி மேற்கொள்வதில்லை.ஆண், பெண்களுக்கு நவீன சுகாதார வளாகம், சமுதாயக்கூடம் வசதி ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடிகால் அமைக்க வேண்டும்
டி.மகாலட்சுமி, பாலசமுத்திரம்:கிராமத்தில் பல தெருக்களில் வடிகால் வசதி, சிமென்ட் தளம் இல்லை. மெயின் ரோட்டில் சாக்கடை அமைக்கும் திட்டம் பல மாதமாக முழுமை பெறவில்லை. இதனால் கழிவு நீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது.
போர்வெல் நீரையும் ஆற்று நீரையும் கலந்து விநியோகிக்கின்றனர். இதனால் பாதிப்பு ஏற்படுகிறது. தனித்தனியாக விநியோகிக்கும் நடவடிக்கை தேவை. அனைத்து தெருக்களிலும் வடிகால் வசதி, சிமென்ட் தளம் அல்லது பேவர் பிளாக் பதிக்க வேண்டும். பெண்களுக்கு சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்.
ரூ.50 லட்சம் திட்ட பணிக்கு இடையூறு
கே.கனிராஜ், ஊராட்சி தலைவர்:ஊராட்சியில் திருமலாபுரம், பந்துவார்பட்டி, பாலசமுத்திரம், கல்லுப்பட்டி, க.விலக்கு, பிராதுக்காரன்பட்டி, கருத்தமலை, பிஸ்மி நகர் உட்பட 13 குக்கிராமங்கள் உள்ளன.குன்னூர் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் க.விலக்கு, ஜி.கல்லுப்பட்டி, பாலசமுத்திரம் ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் இருந்தது. ஊராட்சியில் குடியிருப்புகளின் விரிவாக்கம் அதிகரித்துள்ளது.
க.விலக்கில் இருந்து குறைவான வினியோகத்தால் குழாய் மூலம் குடிநீர் சென்று சேர்வதில்லை. ரூ.50 லட்சம் மதிப்பில் அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படைத் தேவைகளுக்கான பணிகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இதனை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் பொது மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை.அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் தடங்கல்களை சரி செய்து, ஊராட்சி நிர்வாகத்திற்கு ஆலோசனையும், உதவியும் செய்து தமிழக அரசுக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்களிடம் ஏற்படும் அவப்பெயரை மாற்ற நடவடிக்கை வேண்டும்.