/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தீபாவளி ஸ்வீட் விற்பனை செய்ய ஆவினுக்கு ரூ. 1.30 கோடி இலக்கு
/
தீபாவளி ஸ்வீட் விற்பனை செய்ய ஆவினுக்கு ரூ. 1.30 கோடி இலக்கு
தீபாவளி ஸ்வீட் விற்பனை செய்ய ஆவினுக்கு ரூ. 1.30 கோடி இலக்கு
தீபாவளி ஸ்வீட் விற்பனை செய்ய ஆவினுக்கு ரூ. 1.30 கோடி இலக்கு
ADDED : செப் 30, 2025 04:54 AM
தேனி: தீபாவளியை முன்னிட்டு தேனி ஆவின் நிறுவனம் மூலம் ரூ. 1.30 கோடிக்கு இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக விற்பனை பிரிவு துணை மேலாளர் மனோஜ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு மைசூர்பா, பால்கோவா, பாதாம் பால் பவுடர், நெய், ஐஸ்கீரிம் உள்ளிட்டவை கூடுதலாக விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தாண்டு ரூ. 1.30 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பண்டிகை கால விற்பனைக்காக கலெக்டர் அலுவலகம், தேனி பழைய பஸ் ஸ்டாண்ட், பழனிசெட்டிபட்டியில் சிறப்பு விற்பனை ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது.
மைசூர்பா 250 கிராம் ரூ. 140, 500 கிராம் ரூ. 270, பால்கோவா 250 கிராம் ரூ.130, 500 கிராம் ரூ. 250க்கும், நெய் 100 மி.லி., ரூ.80க்கும், 500 மி.லி., ரூ.345, ஒரு லிட்டர் ரூ. 660க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி.,வரி குறைப்பால் நெய் லிட்டருக்கு ரூ.40 குறைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து டெப்போக்களில் இருந்தும் திண்டுக்கல் ஆவினில் இனிப்புகள் வாங்கினர். இந்தாண்டு முதன்முறையாக தேனி ஆவினில்1.2 டன் மைசூர்பா ஆர்டர் பெற்றுள்ளோம் என்றனர்.