ADDED : பிப் 19, 2024 05:18 AM

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி தனியார் விடுதி கூட்டரங்கில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற ராஜகம்பளத்தார் சமூகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு, பாராட்டு விழா நடந்தது.
மாவட்ட ராஜகம்பளத்தார், ஆண்டிபட்டி மாலைக்கோயில் சங்கம் சார்பில் நடந்த விழாவில் சங்க நிரந்தர தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் கோபால், முத்துரங்கநாகவிஜயன், துணைச் செயலாளர்கள் பால்பாண்டியன், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் நாகராஜன் வரவேற்றார். திண்ணை பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், தலைமை ஆசிரியர்கள் முருகன், சுப்புலட்சுமி, பெரியகுளம் துணைத் தாசில்தார் மோகன் முனியாண்டி, முதுகலை ஆசிரியர் பழனிச்சாமி உட்பட பலர் வாழ்த்தி பேசினர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ராஜகம்பளத்தார் சமுதாய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், ஊக்கத் தொகைகள் வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை பாலகிஷ்ணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர். மாலைக்கோயில் சங்க பொருளாளர் காமயசாமி நன்றி தெரிவித்தார்.

